மேற்கு மண்டலச் செய்திகள்
- போஜ்புரி-1 மற்றும் போஜ்புரி-1 ஆகிய கோட்டங்களின் பணித்தளங்களில், சுமார் 4000 பேருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நற்செய்தியின் வாயிலாகவும் மற்றும் கைப்பிரதிகளின் வாயிலாகவும் அறிவிக்க கர்த்தர் கிருபைசெய்தார்.
- பாபுவா மற்றும் பாரே ஆகிய பணித்தளங்களின் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளின் வாயிலாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சிகளில், சகோ. மரியோஷ் மற்றும் சகோதரி ரீனா கோபோர்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, தேவ செய்தியையும் பகிர்ந்துக்கொண்டனர்.
- கடந்த ஆண்டு இறுதிவரை, சுமார் 10000 பேருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க தேவன் பாராட்டிய கிருபைக்காக அவருக்கு நன்றிசெலுத்துகின்றோம்.
- கர்த்தருடைய பெரிதான கிருபையினால், பெலாவன் பணித்தள ஆலயத்திற்கான நில ஆவணங்களை நிறைவுசெய்ய கர்த்தர் உதவிசெய்தார்.
- பணித்தளங்களில் கைம்பெண்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் விதவைகள் 500 பேருக்கு இலவசமாக குளிராடைகளையும் மற்றும் உடைகளையும் வழங்கி, கூடவே, கிறிஸ்துவின் அன்பினையும் அறிக்க கர்த்தர் கிருபை செய்தார்.
- ஜனவரி 18 அன்று நடைபெற்ற விபத்தினால், கால் எலும்பு முறிவுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் ஜெம்ஸ் ஹேப்பி ஹோம் இல்லத்தின் சகோதரர் மண்டு விரைவில் குணமாகவும், சசராம் பணித்தளத்தில் ஆலயக் கட்டுமானப் பணிகள் திட்டமிடப்பட்டிருக்கும் நாட்களில் தடையின்றி தொடங்கப்படவும், பெலாவன் பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படவும், உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.