மேற்கு மண்டலம்
செப்டம்பர் 06 ஆகஸ்ட் 15 அன்று, B-1 கோட்டத்தின் ஊழியர்களுக்காக நடத்தப்பட்ட குடும்பக் கூடுகையில் 35 ஊழியர்கள் குடும்பமாகக் இக்கூடுகையில், சென்னையைச் சேர்ந்த சகோதரர் ஜான் சாமுவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. ஆவிக்குரிய வாழ்க்கையில் புத்துணர்ச்சி பெற்று, தேவ இராஜ்யத்தின் பணிகளைத் தொடர ஊழியர்களை இக்கூடுகை உற்சாகப்படுத்தியது.
செப்டம்பர் 07 முசஹர் சமூக மக்களது பொருளாதார நிலையினை மேம்படுத்தும் பொருட்டு, அவர்களுக்கு இலவசமாக ஆடுகள் விநியோகிக்கும் திட்டம் கோத் மற்றும் ஏக்ராசி ஆகிய இரண்டு பணித்தளங்களில் நடைபெற்றது. தெரிந்தெடுக்கப்பட்ட 9 பயனாளர்களின் குடும்பத்திற்கு தலா 2 ஆடுகள் வழங்கப்பட்டன. இச்சமுதாய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவும், வருங்காலச் சந்ததியினர் கல்வியறிவைப் பெறவும் மற்றும் இவர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் வாயிலாக கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.
செப்டம்பர் 08 பணித்தளங்களில் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டோர் உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேல் உள்ள தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் சமுதாயப் பராமரிப்பு மையத்தின் கட்டுமானப் பணிகளை, மேல்தளம் வரை செய்துமுடிக்க உதவியதற்காக ஆண்டவருக்கு நன்றி சொல்லுகின்றோம்;. இக்கட்டுமானப் பணிகள் விரைவில் எவ்வித தடையுமின்றி திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்குள் முடிக்கப்பட ஜெபிப்போம்.
செப்டம்பர் 09 சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையத்தின் கட்டுமானப் பணிகள் எவ்வித தடையும் இன்றி குறிக்கப்பட்ட நாட்களுக்குள் திட்டமிடப்பட்டபடி கட்டிமுடிக்கப்படவும், இப்பணித்தள ஆலயத்திற்காகவும் மற்றும் விசுவாசிகளுக்காகவும், பர்ஹாரி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட ஏற்ற நிலம் கிடைக்கவும் ஜெபிப்போம்.
செப்டம்பர் 10 உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்கு உண்டாயிருக்கும் தடைகள் நீக்கவும், விடுதலையோடு ஜனங்கள் ஆலயத்தில் ஆண்டவரே ஆராதிக்கும் சூழ்நிலை உருவாகவும், இம்மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளின் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கிறிஸ்துவை கண்டு கொள்ளவும், வாலிபர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் செய்யப்பட்டு வரும் ஊழியங்கள் நல்ல பலனை தரவும் ஜெபிப்போம்.