மேற்கு மண்டலம்
- B-1 கோட்டத்தில், உத்திரப்பிரதேச மாநிலத்தின் விசுவாசிகளுக்காக தொலைபேசி வாயிலாக ஜெபம் ஏறெடுக்கப்பட்டது. இந்த ஜெபத்தில் எழுத்தறிவற்ற 65 விசுவாசிகள் பங்கேற்று உத்திரப்பிரதேசத்திற்காகவும் மற்றும் இம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். அத்துடன், கல்வி அறிவு பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட ஜெபத்திலும் 40 பேர் பங்கேற்றனர். இம்மாநிலத்தில், ஊழியத்திற்கும் மற்றும் கர்த்தரை ஆராதிக்கவும் உண்டாயிருக்கும் தடைகளை கர்த்தர் நீக்கவும், விசுவாசிகள் விடுதலையோடு விரைவில் கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.
- B-2 கோட்டத்தில் நடைபெற்ற ஒருநாள் ஊழியர் உபவாசக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். செய்யப்பட்டுவரும் ஊழியங்களைக் குறித்து ஆலோசிக்கவும், வருங்கால ஊழியங்களுக்காகத் திட்டமிட்டு, ஆண்டவருடைய நடத்துதலுக்காக அவருடைய பாதத்தில் காத்திருக்கவும் கர்த்தர் உதவிசெய்தார்.
- கர்த்தருடைய பெரிதான கிருபையினால், பிப்ரவரி 15 அன்று, துர்க்காவதி பணித்தளத்தில் ஜெம்ஸ் செயல்மையம் திறக்கப்பட்டது. சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் ஜெபத்துடன் செயல்மையத்தைத் திறந்துவைத்து, தொடர்ந்து நடைபெற்ற ஆராதனையில் கர்த்தருடைய வார்த்தையினையும் பகிர்ந்துகொண்டார். பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
- சசராம் பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கான அரசு அங்கீகாரம் கிடைக்க உதவிசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். விரைவில் இப்பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படவும், விடுதலையோடு ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.
- அரசாங்கப் பொதுத்தேர்வு எழுதிவரும் ஜெம்ஸ் மிஷனரிகள் மற்றும் இல்லங்களின் பிள்ளைகளுக்காகவும், பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.