ஜூன் 06 B-1 கோட்டத்தின் கோரியா மற்றும் B-2 கோட்டத்தின் துர்காவாதி ஆகிய பணித்தளங்களில் "உண்மையுள்ள ஊழியன்" என்ற தலைப்பின்கீழ் நடைபெற்ற ஊழியர் சிறப்புக் கூடுகையில், பணித்தளத்தின் பல்வேறு பொறுப்புகளின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் பங்கு பெற்று தேவ ஆசீர்வாதத்தினைப் பெற்றனர். இக்கூடுகையில், சகோதரர் ஜான் சாமுவேல் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டார். அன்பின் விருந்துடன் கூடுகை நிறைவுபெற்றது. பணித்தளங்களில் வரும் நாட்களில் திட்டமிடப்பட்டிருக்கும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஊழியர்களின் சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.
ஜூன் 07 B-1 மற்றும் B-2 கோட்டங்களில் ஜெம்ஸ் சிறுவர் துறை ஊழியர்கள் மூலம் விடுமுறை வேதாகமப் பள்ளி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. B-1 கோட்டத்தின் துர்காவதி பணித்தளத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் 30 பேரும் மற்றும் B-2 கோட்டத்தின் தினார் பணித்தளத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் 60 பேரும் இப்பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற சகோதர சகோதரிகளுக்காகவும் மற்றும் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஜூன் 08 B-1 கோட்டத்தின் தெஹோலியா பணித்தளத்தில் நடைபெற்ற விடுமுறை வேதாகம பள்ளி வகுப்புகளில் 110 சிறுவர் சிறுமியர் பங்குபெற்று தேவ அன்பை அறிந்து கொண்டனர். பாரே மற்றும் பாபுவா ஆகிய பணித்தளங்களில், ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளில் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். பணித்தளச் சபைகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், தடைகள் நீங்கவும் மற்றும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஜூன் 09 சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெறவும், பெலான் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிக்கவும்.
ஜூன் 10 பணித்தளங்களில் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றவர்கள், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மேல் உள்ள தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! துர்காவதி பணித்தளத்தில் நடைபெற்று வரும் சீஷத்துவப் பயிற்சி வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலப்படவும், ஆத்ம ஆதாயப் பணியில் உற்சாகமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் ஜெபிப்போம்.

