ஜூலை 07 சசராம் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் தடையின்றி திட்டமிடப்பட்டுள்ள நாட்களில் நிறைவடையவும் மற்றும் பெலாவன் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம். பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் பின்தொடர் ஊழியங்கள், வீட்டுக் கூடுகைகள் மற்றும் சுவிசேஷ ஊழியங்களின் மூலமாக ஜனங்கள் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்பட ஜெபிப்போம்.
ஜூலை 08 பணித்தளங்களில், சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படிந்து, கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலமாக சபைக்கு வெளிப்படுத்தினர். இவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், தங்கள் குடும்பங்களில் மற்றும் உறவினர்கள் மத்தியில் சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம்.
ஜூலை 09 ஹட்டா பணித்தளத்தில் நீண்ட நாட்களாக நிலவிவந்த நிலப் பிரச்சனை, தேவனுடைய கிருபையினால் முடிவுக்கு வந்ததுடன், நிலத்தினை அளந்து வேலி அமைக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். வியாதியின் மற்றும் பிசாசின் பிடியிலிருக்கும் ஜனங்களை கர்த்தர் குணமாக்கவும், விசுவாசிகளின் அன்றாடத் தேவைகள் சந்திக்கப்படவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், ஜனங்கள் விடுதலையோடு கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.
ஜூலை 10 மேற்கு மண்டல பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் மற்றும் வாலிபர் ஊழியங்களுக்காகவும், வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சீஷத்துவப் பயிற்சி முதல் அணியினரின் சான்றளிப்பு நிகழ்ச்சிக்காகவும், பயிற்சி பெற்றோர் தங்கள் கிராமங்களில் கிறிஸ்துவுக்கு சாட்சிகளாக வாழவும், ஆத்தும ஆதாயப் பணியில் அயராது தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் ஜெபிப்போம்.
