அக்டோபர் 7 ஆகஸ்ட் 17, 27 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய தினங்களில், ரோமர் புத்தகத்திலிருந்து நடத்தப்பட்ட ஆன்லைன் வேதாகம வகுப்புகளில், B-1 கோட்டத்தின் சபைகளைச் சேர்ந்த விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்று, ஒவ்வொரு அதிகாரத்தினையும் முறையாகக் கற்றறிந்தனர். செப்டம்பர் 13 அன்று போஜ்புரி-2 கோட்டத்தின் சபைகளில், எபிரெயர் நிருபத்திலிருந்து நடைபெற்ற வேதாகமத் போட்டியில் 750 பேர் பங்கேற்றனர். வேதவாசிப்பில் விசுவாசிகள் ஆர்வம் காட்டவும், வேத அறிவில் பெருகவும், அக்டோபர் 29 அன்று நடைபெறவிருக்கும் சசராம் பணித்தள ஆலய அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 8 சோன்ஹான் பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில், சோன்ஹான், சந்த் மற்றும் ஹட்டா பணித்தளங்களைச் சேர்ந்த விசுவாசிகள் சுமார் 150 பேர் பங்கேற்றனர்; தொடர்ந்து, ராம்நகர் பணித்தளத்தில் நடைபெற்ற எழுப்புதல் கூட்டத்தில் சுமார் 70 பேர் பங்கேற்றனர்; சகோ. ஜெபசிங் இக்கூட்டங்களில் தேவ செய்தியளித்து, ஆவிக்குரிய வாழ்க்கையில் விசுவாசிகளை உற்சாகப்படுத்தினார். மார்பகப் புற்றுநோய்க்காக சிகிச்சைபெற்றுவரும் சகோதரி ரிங்கி குமாரிக்காகவும், நரம்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர் ராமாவத்திற்காகவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 9 சூரியபுரா பணித்தளத்தில், ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் நடைபெற்ற GIANT கூடுகையில் 75 பேரும், தொடர்ந்து, ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தினங்கள், தியோகலியா பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற GIANT கூடுகையில், 60 பேரும் பங்கேற்றனர். இக்கூட்டங்களில் ஜெபவாழ்க்கையைக் குறித்து விசுவாசிகளுக்கு கற்றுக்கொடுக்கவும், உற்சாகப்படுத்தவும் கர்த்தர் கிருபைசெய்தார். சகோ. ஹென்றி மற்றும் சகோ. ஸ்டீபன் சங்கர் ஆகியோர் இக்கூட்டங்களில் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் GIANT ஊழியங்களுக்காகவும், விசுவாசிகள் ஜெப வாழ்க்கையில் வளரவும் ஜெபிப்போம்.
அக்டோபர் 10 ஆகஸ்ட் 26 அன்று போஜ்புரி-2 கோட்டத்தின் கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற தம்பதியர்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில்> 350 குடும்பத்தினர் பங்கேற்றனர். சகோ. எடி மற்றும் சகோதரி பிரின்சி ஆகியோர், பயனுள்ள பாடங்களை தம்பதியருக்குக் கற்றுக்கொடுத்து, தேவ வார்த்தையையும் பகிர்ந்துகொண்டனர். றூயவளயுppஇ குயஉநடிழழம மற்றும் ஐளெவயபசயஅ வாயிலாக பகிரப்படும் சுவிசேஷ குறும்படங்கள் மூலமாக ஜனங்கள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
அக்டோபர் 11 ராம்நகர் பணித்தளத்தைச் சுற்றியுள்ள சபைகளுக்கான ஒருநாள் மூப்பர்கள் கூட்டம் செப்டம்பர் 15 அன்று ராம்நகர் பணித்தளத்தில் நடைபெற்றது. ராம்நகர், நுவான், ரியோதிபூர், பதௌரா மற்றும் பக்சடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முதிர்ச்சியடைந்த விசுவாசிகள் 75 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். சகோ. வின்சென்ட் ஜெயராஜ் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். இக்கூட்டத்தில் பங்கேற்ற மூத்த விசுவாசிகள், மூப்பராக தங்கள் கடமையினை சபையில் செய்யவும், இப்பணித்தளத்திலுள்ள விசுவாசிகளுக்காகவும் ஜெபிப்போம்.
